தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.
பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.
இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.
- கணையாழி வழி - ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.
- ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.
- நிகர் முதல் வாசல் வரை - 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.
- அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.
- அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.
- ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆயிஷா ❤️ • ஆயிஷா எங்களைப் போல் எல்லாம் இல்லை, அவள் கேள்வி கேட்பவள். தெரியாதவற்றை தெரிந்து, புரியாதவைகளை புரிந்து கொள்ள முனைபவள். அறிவை அடையும் ஆவலில் அலைபவள். அவள் எண்ணங்கள் உயர்வானவை. நாங்களும் சிறுவயதில் இப்படித்தான் இருந்திருப்போம். ஏனோ தெரியவில்லை காலப்போக்கில் எல்லாம் மாறி மரத்துப்போன மனிதர்களாய் மாறுகிறோம். கேள்வி கேட்கும் ஆர்வமும், புதியவற்றை அறியும் ஆவலும் போகப்போக போயேவிடுகின்றன. இதற்கு முக்கிய காரணியில் ஒன்றுதான் நம் பள்ளிப்பருவம். ஒரு சிறந்த பள்ளிக்கூடமும் அதன் ஆசிரியர்களும் ஒருவனை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் உயர்த்தக்கூடிய வல்லமை படைத்தது. அதே வகையில் ஒரு சில ஆசிரியர்கள் இதற்கு முரணாகவும் செயற்படுகின்றனர். இந்த ஒரு சிலரும் தம் பொறுப்பை உணர்ந்து சிறந்த கல்வியையும் உயர்ந்த எண்ணங்களுடனான ஆளுமையையும் பிள்ளைகளிடத்தில் வளர்ப்பார்களேயானால் நாளைய உலகம் நல்லதாய் அமையும் என்பதில் ஐயமில்லை. • ஒரு சில பக்கங்களை மட்டுமே கொண்டு நம்மனதை விரிக்கும் இப்புத்தகம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய ஒன்று. • [“பள்ளிக்கூடங்கள் பலிக்கூடங்கள் ஆகிவிட்டன. எல்லாமே முன் தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள், அவற்றிற்கு நோட்ஸ்களில் ரெடிமேட் பதில்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாய் மாணவர்கள் உருமாற்றம் அடைந்து விட்டனர்.” —புத்தகத்திலிருந்து]
ஆயிஷா . ரெம்ப சின்ன நூல் . ஆனால் ஒரு சிறு மிளகின் உரைப்பைபோல கண்கலங்க வாய்த்த நூல் . கேள்வி கேட்பவரை மிதித்து நசுக்கி நெருப்பிலிட்டு கருக்கும் ஒரு நிறுவனமாகவே நம் கல்வி கூடங்கள் செயல்படுகிறது இன்றும். எதுவும் பெரிதாக மாறவில்லை என்று நினைக்கும் போது மனம் வெம்புகிறது . நானும் கேள்விகேட்டபோது எல்லாம் "அதிகபிரசிங்கி, மொதல்ல மார்க் வாங்கு அப்புறம் கேள்வி எல்லாம் கேக்கலாம் " என்று மட்டம்தட்டப்பட்டு பலமுறை உக்கார வைக்கப்பட்டேன். ஆயிஷாவின் மூலம் அந்த வலியை திரும்ப உணர்ந்தேன் . சமீப காலத்தில் மனதில் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு படைப்பு .
குழந்தைகளிடமும், மாணவ செல்வங்களிடம் இயற்கையான குணம் ஒன்று உண்டு - அது கேள்வி கேட்பது. தன்னை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கேள்வியாக கேட்டு பதில் எதிர்பார்க்கும் குணம்.
இந்த குறுங்கதையில் ஆயிஷா என்ற மாணவி தனது ஆசிரியர்களிடம் விஞ்ஞான கேள்விகளாக அடுக்கி கேட்க, தங்கள் தொழிலை கடினமாக்குகிற வகையில் இருப்பதால், இவளை அடிக்கிறார்கள்.
அந்த பள்ளியில் உள்ள இன்னொரு ஆசிரியை, ஆயிஷாவை நேசிக்கிறாள். அவளது கேள்விகளை செவி மடுத்து கேட்கிறாள்.
ஆயிஷாவின்அறிவு தாகத்தை மட்டம் தட்டி அடிக்கும் ஆசிரியர்கள், ஒரு வகையில் கல்வி மறுக்கப்படும் பெண்களின் வில்லிகளாகவே இருக்கிறார்கள் என்பதை இக்கதையின் முடிவு உணர்த்துகிறது
அவசியம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் படிக்க வேண்டிய புத்தகம்.
இந்நூல் ஓர் சிறார் நூல், ஆனால் இந்நூலை கட்டாயம் வாசிக்க வேண்டிய நபர்கள் யாரெனில், சிறுவர்களின் மேல் அதிக பற்று வைத்திருக்கிறோம் என்று அவருடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உறவினர்கள் முன்பின் தெரியாத அந்நியர்கள் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களெல்லாம் யாரெனில் நாங்கள் குழந்தைகளின் மேல் உள்ள அக்கறையினால் தான் அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்கள் வாழ்வை செம்மைப்படுத்துகிறோம் என மார்தட்டிக் கொள்ளும் நபர்கள். இப்படி இருப்பதினால் தான் பொதுவெளியில் அவர்களின் தர்ஜா உயர்ந்துள்ளது என அவர்களின் மன ஓட்டம் இருக்கும் போலும்.
குழந்தைகளின் மனம் எப்போதும் அறியாத விஷயங்களின் மேல் உள்ள ஆர்வத்தினால், பேச்சுக்கள் கேள்வியை நோக்கியே இருக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள அவர்கள் மனம் ஏங்கி அவ்விடையத்தை தாங்கள் முழுமையாக உள்ளுணரும் வரை கேள்விகளின் மூலமாக நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். இதை அறியாத பெரும்பான்மையான பெரியோர்கள்(மனதளவில் குறுகிய எண்ணம் கொண்டவர்கள்) அக்கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரியாமல் தம்முடைய அதிகாரத்தை நிலைநாட்டி அடக்கி ஆழ்வார்கள். இப்படி அடக்கி ஆண்டததில் இந்நூலில் உள்ள ஆயிஷாவுக்கு நிகழ்ந்தது போல இப்போதும் சமூகத்தில் பல நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது
இந்நூலை வாசித்து முடிக்கும் போது என் மனதில் எழும் கேள்விகள் ஏராளம். நாம் ஏன் குழந்தைகளின் மேல் அதிகாரத்தை செலுத்தி அவர்களின் அறிவை பாழ்படுத்துகிறோம் என்று தான் தோன்றியது. முடிந்த வரை அவர்களின் சொற்களை செவி தாழ்த்தி கேட்டாலே போதும், அவர்கள் எந்த நோக்கத்தில் கேட்கிறார்கள் என்று நம் மனம் உருகி அவருக்கு பதில் அளிப்போம். தமிழில் சிறார் நூல்களின் பட்டியலில் இப்புத்தகத்திற்கு ஓர் தனி இடம் உள்ளது. அதனாலே இந்நூலின் எழுத்தாளர் பெயர் 'ஆயிஷா நடராஜன்' என அழைக்கப்பட்டு வருகிறார்.
ஒவ்வொரு ஆசிரியரும் நிச்சயமாக படிக்க வேண்டும். முடிந்தால் இந்த புத்தகத்தை B.Ed பட்டபடிப்பில் சேர்க்கலாம். சிறிய புத்தகம் எனினும், ஏற்படுத்துவதோ மிகப்பெரிய தாக்கம்.
one of the best short stories, I have ever read. This book is very much appropriate for schoolers and begineers. I completed within an hour of time, but the impact created by this read will create a scare in your mind forever. The writings are simple and easy to understand and the author is very much concerned about the need of unleveraged education.
இன்றைய கல்வி முறை, பள்ளிச்சூழல் மற்றும் ஆசிரியர்களின் தரம் ஆகியனவற்றை விவரிக்கும் ஒரு குறுநூல். கற்றுக்கொள்ள தனியாத ஆர்வம் உள்ள ஒரு பள்ளி மாணவி பள்ளி ஆசிரியர்களால் எவ்வாறு மாற்றப்படுகிறார் என்பதை விவரிக்கிறது.
(ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை)
ஆசிரியர் - இரா.நடராசன்
விலை - ₹25
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்.
✨என் கண்களை கலங்க செய்த புத்தகங்களில் ஒன்றுதான் இந்த “ஆயிஷா” என்கின்ற புத்தகம்.
✨அறிவும் ஆர்வமும் மிக்க ஒரு மாணவிக்கு பல ஆசிரியர்கள் கொடுத்த பதில் - அடியும் அவமானமும். இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு நடுவில் அவளை அரவணைத்து, அறிவியல் புகுத்தி, அவள் கேள்விக்கு பதிலைத் தேடி ,சில சமயங்களில் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்ற ஒரு ஆசிரியையும் இருக்கிறார்.
✨நாம் எல்லோரும் ஆயிஷா என்கின்ற கதாபாத்திரத்தை நம் வாழ்வில் கடந்து வந்திருப்போம். யாராக என்று தெரியுமா ? நம் தோழியாக, நம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக, ஏன் நாமாக கூட இருக்கலாம்...
✨இன்றளவும் கேள்விக்கு பதில் இல்லாமலும், கேட்டக் கல்வி கிடைக்காமலும் உள்ளது.
✨புரிந்து படிப்பதை ஆதரித்தும், மனப்பாட கல்வியை எதிர்த்தும் கல்வி சூழலில் மாற்றம் வர வேண்டும்.
✨இந்த புத்தகத்தை ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய அற்புதமான புத்தகம்.
ஒரு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையான புத்தகம் என்ற விளம்பரத்துடன் வெளியாகியுள்ள பல்வேறு புத்தகங்களை நாம் பார்த்திருக்கிறோம். படித்திருக்கிறோம். ஆனால் கண்டிப்பாக ‘ஆயிஷா’ ஒரு லட்சம் அல்ல பல கோடி பேர் அறிந்திருக்க வேண்டிய புத்தகமாக அமைந்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டியது இந்நூல். ஆயிஷா என்ற சிறுமியைப் பற்றிய இந்நூலினைப் படித்தவுடன் கண்டிப்பாக இதனை மற்றவர்கள் படிக்க அறிவுத்த வேண்டும் என்று எண்ணியதுண்டு. ஏன் இந்த எண்ணம் மனதில் ஏற்பட்டது என்பதை நீங்கள் படித்தபின் அறிந்துகொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். அதனாலேயே பலரும் படிப்பதற்காகவும் பகிர்வதற்காகவும் புத்தகங்களின் பக்கங்களைப் பரிமாற்றம் செய்துள்ளேன் (புத்தகம் கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி வைத்துக்கொள்ளவும்). படித்த பின்…… தாள்களையும் தங்களின் எண்ணங்களையும் மற்றவருடன் பகிருங்கள்……
ஒரே வகுப்பறை...ஒரே பாடத்திட்டம்....ஒரே வகையான பாடங்கள் என செக்குமாடுகளாய் ஓடிகொண்டிருக்கும் ஆசிரியர் ஒருவர் எழுதியது.
அவரும் அவ்வாறே நீண்ட பகலுக்கும் நிம்மதியற்ற இரவிற்கும் ஆட்பட்டுக் கிடக்கும் செக்கு மாடுகளில் ஒருவராகத் தான் இருந்திருக்கிறார்.
அவரை மாற்றியது ஆயிஷா என்னும் பெண். ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் திறனே மனிதர்களை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற நுட்பமாகும்.
அவ்வாறாக ஒரு கேள்வி...ஒருவரின் வாழ்வை புறட்டிப்போட்டுவிட முடியுமா என்றால்...ஆம் என்று தான் சொல்ல வேண்டும்...அதன் பொருள் இந்த புத்தகத்தினுள் பொதிந்துள்ளது.
பாடப்புத்தகங்களைத் தாண்டி புத்தகங்கள் வாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே...புத்தகங்களின் ஊடாகவே புறவுலக அறிவினைப் பெற முடிகின்றது.
ஆயிஷா என்னும் பெண் இவையெல்லாம் பெற்றவளாக இருக்கிறாள்...அவளின் கதையே இது.... வாசித்துப் பாருங்கள்...
நீண்ட நாட்களுக்கு பிறகு எதேனும் புத்தகம் ஒன்றைப் படிக்கலாமென்று, கண்ணில் பட்ட இந்த ஆயிஷாவைப் புரட்டினேன். படித்து முடித்த பின் இதயம் கனத்து, பதற்றம் கூடி, கண்கள் கலங்கி போனது. ஆயிஷாவில் ஒரு 50 சதவிகிதமேனும் நான் என் பள்ளி கல்லூரி பருவத்தில் இருந்திருப்பேன்.. அனைத்தும் நியாபகம் வந்தது. இன்னும் பல ஆயிரம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாற்றபட வேண்டிய கொடுமையான உண்மை நிலையை அழுத்தமாக ரா. நடராசன் என்றோ தீட்டியுள்ளார்.
Nostalgic. I remember bawling my eyes out when I read this book in seventh grade, after seeing so much similarity between me and Ayeesha. The fact that the author has made such an impact with a mere 30 page book marks credibility of this story.
Maybe characterisation is a bit flat, but the story resembles the reality of so many young students in India.
Reading this book, I realised that we have all been doing it wrong all along the way. Questioning and seeking answers were the most important things in education. We were doing everything other than that. This book is a hard hit on the 'so-called great education system' in India.
This book has made me question something, hoping to find the answer soon.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு என்று புரிந்துக் கொள்ளாதவரை ஆங்காங்கே வன்முறைகள் நடந்துக் கொண்டே தான் உள்ளது. வன்முறை என்பது ஆயுதத்தால் மட்டுமல்ல , அடுத்தவரை பார்க்கும் பார்வையிலே, நம் சொல்லாலே, செயலாலே நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படியே ஆயிஷாவுக்கும் நடந்து உள்ளது.
ஆயிஷா by இரா. நடராசன். A small book but created a big impact. A must read, especially for teachers. Many curious minds are being suppressed not only by a few teachers but also by their friends. This book is to protect the curious minds living among each one of us
ஒரு 24 பக்க புத்தகம் ஒருவரின் அடையாளத்தை (நடராசன் to ஆயிஷா நடராசன்) மாற்றும் என்றால் அந்த புத்தகத்தின் வலிமை எவ்வாறு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்...🙏