ரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள் எல்லாருமே மழையின் அடிமைகள். எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக்கொண்ட ஒரு நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். எளிமையான மனிதர்கள். ஆனால், அவர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம் பிரமிக்கத்தக்கது. அத்தெருவில் யாரும் யாரையும் நேசிக்காமல் இருந்துவிடவில்லை. அவரவர்கள் போக்கில் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள் அல்லது நேசமுடனிருந்து பிரியம் செலுத்துகிறார்கள். நம் பக்கத்து வீட்டு நபர்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய மிகச் சாதாரணமான மனிதர்களைக் கொண்டும் ஓர் அசாதாரணமான நாவலை உருவாக்கமுடியும் என்பதை மிக அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் வண்ணநிலவன். துன்பங்கள் அறவே ஒழிந்துவிடவில்லை. சிறிதே வீரியத்தை இழந்து போயிருந்தன. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருஷம் வரையிலும்கூட நீடித்திருக்கப் போகிற துக்கம் இப்போதும் இருந்தது. சின்னச் சின்ன சந்தோஷங்களும் நிரந்தரமாகிப் போன துயரங்களுமாக நீண்டுகொண்டே போகிறது வாழ்க்கை. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வைப் பிரதிபலிக்க முடியாவிட்டாலும், ஏதேனும் ஒரு கணத்தை, சிறு அசைவை நாம் உணரும்படி செய்கிறபோது படைப்பு முழுமை பெற்றுவிடுகிறது. வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நிறைவைத் தந்துவிடுகிறது. அந்த வகையில், இந்த நாவல் தமிழில் வெளி வந்த மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.
Vannanilavan was born in Tirunelveli. His real name is U Ramachandran. He studied in Palayankottai, Tirunelveli and Sri Vaikundam and came to Chennai in 1973 in search of work. He worked for a short time in magazines like Kannadasan, Kanayazhi and Puduvaikural, and in Thuglak magazine in 1976 and later in 'Subhamangala' magazine. He has also worked as a dialogue writer for the Tamil film 'Aval Appadithaan' directed by Rudraiya. He married Subbulakshmi on April 07, 1977. They have a son named Anand Shankar and two daughters named Sasi and Uma. He currently lives in Kodambakkam, Chennai.
It is not a plot driven novel. It is more a character sketch. There are six houses in a street and people from each house is described in flesh and blood by Vannanilavan. Who are these people? They are Tamil Protestant Vellala Christians. An interesting portrayal.
ரெயினீஸ் ஐயர் தெரு - ஆறு வீடுகள் அடங்கிய தெரு. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கதை. முதல் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் டாரதி வழியாக கதை தொடங்குகிறது. தாய் கோழி இல்லாமல் தனியே இரை தேடும் குஞ்சுகள், எதிர் வீட்டு இருதயத்து டீச்சர், எபன் அண்ணன் மீதான அன்பு என்று கதை கதாபாத்திரங்களின் மூலம் விரிந்து செல்கிறது. டாரதி சின்ன பெண், யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்ற விபரம் பத்தாது. இப்படியாக ஒவ்வொரு வீடாக கதாபாத்திரங்கள் வழியாகவே கதை நகர்கிறது. பெரும்பாலும் பெண்கள்தான் முக்கிய கதாபாத்திரங்கள். டாரதி, அவளது சித்தி மகள் ஜீனோ, அத்தெருவில் உள்ள எல்லா வீட்டுக்காரர்களுக்கும் இஷ்டமான கல்யாணி அண்ணன், இரண்டாவது வீட்டு இருதயத்து டீச்சர், அவரது அத்தையம்மாள் இடிந்தகரையாள், அவரது தங்கை பிலோமி, அவளது கணவன் சேசய்யா, பக்கத்து வீட்டு அன்ன மேரி டீச்சர், மூன்றாவது வீட்டு அற்புதமேரி, அவளது அன்பிற்குரிய அண்ணன் சாம்சன், சித்தி எஸ்தர், அன்புள்ளம் கொண்ட ஆனால் குடிக்கு அடிமையான தியோடர், நான்காவது வீட்டு ஆசீர்வாத பிள்ளை, ரெபெக்காள் தம்பதி, அவர்களது இடிந்த வீடு, கொஞ்சமே வந்தாலும் மனத்தைக் கொள்ளை கொள்கின்ற ஆலிஸ், அந்த அடுப்பங்கரை நடைக்கல் இப்படி எண்ணற்ற பாத்திரங்கள், அவர்களுக்குண்டான ஆசைகள், கஷ்டங்கள் என புத்தகம் அதற்கே உண்டான வேகத்தில் நகர்கின்றது. அந்தத் தெருவாசிகளின் குடும்ப நிலவரங்கள், யாருக்கு யாரை பிடிக்கும், பிடிக்காது, வாரத்திற்கு வாரம் வருமானத்திற்கு ஏற்ப மாறும் அவர்களுது வாழ்க்கை முறை என்று நம் கண் முன்னே நிஜ ஆசாமிகளை உலவ விட்டு வேடிக்கை காட்டுகிறார் கதையாசிரியர்.கடைசியாக தெரு ஓரத்தில் இருக்கும் ஜாஸ்லின் பிள்ளை வீட்டையும் அவரது பூர்வீகமும் விளக்கப்படுகிறது. இத்தருணத்தில் அது ஏதோ பின் இணைப்பாக மட்டுமே என்னால் கடந்து போக முடிந்தது. இப்புத்தகம் இப்படியான வாக்கியத்துடன் நிறைவு பெறுகிறது - "மழையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்துவிடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத் தோன்றுவார்கள் மழையின்போது."
ஆறு வீடுகள் கொண்ட சிறு தெரு. அதிகபட்சமாக 30-40 மனிதர்கள் வசிப்பர். கதையாக இல்லாமல் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அத்தியாயங்களாக உள்ளன.
குடித்தாலும் தெருவில் என்ன நல்லது கெட்டது நடந்தாலும் தயங்காமல் உதவி செய்யும் தியோடர், சிறு பெண் என்று மூச்சுக்கு முன்னூறு முறை வர்ணிக்கப்படும் டாரதி, உடலில் ஏற்படும் மாற்றங்களால் எண்ணங்களும் மாறி அல்லாடும் ஜீனோ, உடல்நலம் குன்றிய கணவனுக்காக போராடும் இருதயம் டீச்சர், வயதான ஆசிர்வாதம் பிள்ளை மற்றும் ரெபக்கால் தம்பதி என்று ஒவ்வொரு பாத்திரமும் வாழ்கையை சொல்லாமல் சொல்லிவிட்டு செல்கின்றன. சில சமயங்களில் மனம் கனத்து விடுகிறது.. கதை என்று இல்லாமல் சில சமயம் உணர்ச்சி பிரளயமாக இருக்கிறது.
120 பக்கங்கள் என்றாலும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் வாழ்கையை நமக்கு புகட்டி விட்டு செல்கின்றன.
This felt more like preparation for a novel than a novel itself. There are detailed character sketches about the people who inhabit this street. There is also a lot of description around the place itself and the times this is set in. Nothing much happens though. An okayish short read.
கல்லறை பக்கத்தில் தெரு; ஆறு வீடுகள், பள்ளிச் செல்லும் சிறுமி டாரதி சொல்வதாக கதை ஓட்டம் பிடித்து ஈர்த்து நகர்கிறது. வயதான தம்பதி; நோய்வாய்ப்பட்ட கணவனை ரசிக்கும் மனைவி; நல்லது, கெட்டது என எல்லாவற்றிற்கும் முன்னால் நிற்கும் ஒரு மானிடன், என இன்னும் நாம் பார்த்து பழகிவரும் மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையை ஒரு தெரு மக்களாய் அமைத்து கதை சொல்லி; பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார். அதுவும், வெறும் எண்பது பக்கத்தில் இவ்வளவு உரையாடல்கள், நிகழ்வுகள், முக்கியமாக சிறுமிகளின் எதிர்பார்ப்புகளை வார்த்தைகளால் விவரிக்கும் போது ஆர்வமும், கூடவே அன்பும் கலந்து விடுகிறது.
பிரபஞ்சனுக்கு எப்படி வார்த்தையை பயன்படுத்துகிறாரோ; வண்ணநிலவனும் அவரின் வார்த்தை தேர்வுகளிலையே கட்டிப் போட்டு விடுகிறார்.
கதை முழுக்க மழை பயணிக்கிறது, கதாபாத்திரங்களோடு ஒவ்வொரு நிகழ்விலும் விரிவுபடுத்தி, அன்பை பரிமாறி !!
உ. ராமச்சந்திரன்/வண்ணநிலவன்-வின் குறுநாவல் ரைனிஸ் ஐயர் தெரு.
ஆறு வீடுகள் கொண்ட ஒரு குறுகிய தெரு. 50-க்கும் சற்றே குறைவிலான கிருத்துவ-வேளாள நடுத்தர சமூக மக்களின் வாழ்வியல் சுகம் துக்கம் அன்பும் தான் கதையின் கரு.
டோர்த்தி வீடு இருதய மேரி வீடு ஹென்றி மருதநாயகம் பிள்ளை வீடு அன்ன மேரி வீடு ஒரு கல்லறை ஜோய்ஸில்ன் வீடு
நம்மை ஒவ்வொரு வீட்டிற்கு கூட்டி சென்று அவர்களின் குடும்பத்தை அறிமுகப்படுத்தி , அவர்களின் காமம் , காதல் , அன்பு , துயரம் , தூக்கம் மாற்றும் அவர்க்களின் பார்வையில் இயற்க்கையில் அவர்கள் காணும் அன்பு பாசம் தான் கதை
மழை நேரம்/மழை தரும் புது மணல் , அனாதை கோழி குஞ்சுகளின் சந்தோஷம், மீன் வாங்கு குடை மற்றும் மீன் வாங்கு திறன், வெக்கை காலம், திரை சிலை சொல்லும் கால வரையறை அற்ற கதை, மாம்பழ திருவிழா, கோழி இறகு தரும் சுகம், மற்றும் பல நுண்ணிய கால சமன்பாட்டு இணைப்பு நம்மை ரைனிஸ் ஐயர் தெருவில் வாழச்செய்கிறது
கதையில் காம முரண்கள், சமூக முரண்கள் வருகிறது அதை ஆசிரியர் தனது சொல்ல அடலால் சொல்லி எளிமையாக கடந்துபோகிகிறார்
பிறகு அறிந்தது
1. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, பாளையம்கோட்டை , திருநெல்வேலி பகுதிகளில் கிருத்துவ பாதிரியார்கலை ஐயர் என்று அழைக்க்கு பழக்கம் இருக்கிறது - ரைனிஸ் ஐயர் தெரு விளக்கம்
2. வண்ணநிலவன் இந்த நாவலளை பரிச்சர்த்த முயற்சியாக செய்ததாக செய்திகள் பதிவு செய்கின்றன
ஒரு மழை நேரம் , தேனீர், தின்பண்டங்களும் படைக்கக்கூடிய ஒரு குறு நாவல்.
வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு... மொத்தமா 6 வீடு உள���ள சின்ன தெரு.. ஆனா அந்த ஆறு வீடுகளிளும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் 60 வருசம் வாழ்ந்த ஒரு உணர்வு ஏற்படுறது இயல்பு.. பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு தம்பதி வசிக்கும் வீட்டுச்சுவர் கொல்லையில் ஓடும் கோடை மழைக்கு இடிந்து விழும் தருணம் அகாலமானது. அவங்களுக்கு உதவ யாருமே முன் வரலைன்னு நம்ம வ.நி சொல்றது, யோசிக்கவைக்குது... ஏன்னா, ஒவ்வொரு வீட்லயும் ஒவ்வொரு விசித்திரமான சில மனிதர்கள் வாழ்றதும் பிரச்சனைகள் இருக்குறதும் இயற்கை தானே.. பள்ளிக்கூடம் போற பிள்ளை, வேலையில்லா இளைஞன், குடியும் கும்மாளமுமா இருக்கும் நம்ம தியேடர் (சாவுக்கு உதவி செய்றவனும் அவன்தான்), படுத்த படுக்கையான புருசனை காப்பாத்த துடிக்கும் டீச்சர், அம்மாவால் கைவிடப்பட்ட கோழிக்குஞ்சுகள்.. திருவனந்தபுரம் ரோட்டுல ஜாயிண்ட் ஆகுற ரெயினீஸ் ஐயர் தெரு... ரெயினீஸ் ஐயர் கல்லறைல இருக்குற பாம்பு... நல்லா வாழ்ந்து கெட்டவர்கள் வாழ்ந்த வீட்டுவாசல்ல இருக்குற ஒரு வித அமைதி, ஏக்கம் ...
வண்ணநிலவன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகம் செய்ற விதம்... அப்பிடியே நம்ம கண்ணுக்கு முன்னாடி நிக்குது...
There are times when you are young ,if you are lucky you might have got a chance to go to some places on summer holidays. Those memories are the ones which you can not forget even in your last breath. This books suck a feeling about the Reyinees iyer street as if you go there not once or twice but on every summer holidays for more than a decade. The characters are very normal people but there is something magic in the writers style which makes you never forget about them.
"மழையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்துவிடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத் தோன்றுவார்கள் மழையின்போது."
Story told by describing the people living in Reyinees Iyer theru . Super Narration . Reading experience is like like watching an Iranian movie . Haven't read this type of novel .Vanna nilavan -- has introduced a new story base through this novel .
ஒரு தெரு, அதில் உள்ளவர்களை பற்றிய விளக்கங்கள், அவ்வளவே. ஆனால் அது சுவையான தமிழில் இருக்கிறது(அது தான் வண்ண நிலவன்). மற்றபடி இதை ஓவராக கொண்டாடவெல்லாம் முடியாது அப்படி கொண்டாடிதான் தீரவேண்டுமென்றால் அது உங்கள் இஷ்டம் :-).
It tells about the lifestyle and the nature of people staying in the street. The writer has mentioned about their likings,sufferings and challenges casually that connects any reader
ஒரு தெரு, அதிலுள்ள மனிதர்கள். 100 பக்கம் வரும், ஆனா சில பாத்திரங்கள் அருமை. வண்ணநிலவனோடது எப்பவுமே கொஞ்சம் கடினமான தமிழ் தான். கதைன்னு எதுவுமில்ல, பாத்திரங்கள், அவர்கள் உரையாடல்க,பின்னணி.